அக்காவை திருமணம் செய்ய இருந்தவர் தங்கைக்கு அரங்கேற்றிய கொடூரம்! இலங்கையில் கொடுமை

 

மெதகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இலுக்குபுர, அகலேமட பிரதேசத்தைச் சேர்ந்த 20 வயதுடைய மனநலம் பாதிக்கப்பட்ட யுவதியை பாலியல் வன்புணர்வு செய்த குற்றச்சாட்டில் மைத்துனர் நேற்று திங்கட்கிழமை (02) கைது செய்யப்பட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட யுவதியின் சகோதரி தனது கணவரிடமிருந்து பிரிந்து, மறுமணம் செய்து கொள்ளவிருக்கும் நபருடன் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் பெண் வேலைக்குச் செல்லும் போது தனக்குத் துணையாக இருப்பதற்கு மனநலம் பாதிக்கப்பட்ட தனது தங்கையை வீட்டிற்கு அழைத்து வருமாறு குறித்த பெண் தனது காதலனிடம் கூறியுள்ளார்.அதன்படி, பிபிலை கணுல்வெல மடிப்பலன்முல்ல வீதியில் அமைந்துள்ள அவர்களது வீட்டிற்கு யுவதியை அழைத்து வருவதற்காக காதலனை அனுப்பி வைத்துள்ளார்.சந்தேக நபர் யுவதியை அழைத்து வரும் வழியில் பலத்த மழை பெய்துள்ளதால், அவர்கள் ஒரு வயல்வெளியில் உள்ள பாழடைந்த அறை ஒன்றிற்கு சென்று அங்கு யுவதியை பாலியல் வன்புணர்வு செய்துள்ளார்.

சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட யுவதி தனது தாயிடமும் சகோதரியிடமும் தெரிவித்ததையடுத்து, சந்தேகநபர் கைது செய்யப்பட்டு, பாதிக்கப்பட்ட யுவதி மருத்துவப் பரிசோதனைக்காக மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மெதகம பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரபாத் திஸாநாயக்க முன்னெடுத்து வருகிறார்.


கருத்துரையிடுக

500+ க்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகளைக் கேட்க
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
Site is Blocked
Sorry! This site is not available in your country.