இலங்கையில் புறாவால் நேர்ந்த பயங்கரம்-இளம் குடும்பஸ்தர் பலி

 

கம்பஹா - பேலியகொடை - மீகஹவத்த பகுதியில் புறாக்கள் தொடர்பான தகராறில் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இன்று ஞாயிற்றுக்கிழமை (18) பகல் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

புறாக்கள் வளர்ப்பது தொடர்பாக  இரு தரப்பினரிடையே ஏற்பட்ட தகராறு காரணமாக கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் ஒருவர் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

உயிரிழந்தவர் வத்தளை - ஒலியமுல்ல பகுதியைச் சேர்ந்த 38 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.

இத்தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேக நபரும் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர். 

பேலியகொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துரையிடுக

500+ க்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகளைக் கேட்க
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
Site is Blocked
Sorry! This site is not available in your country.