அழகிய கிராமம் அது. எல்லா போராளிகளும் வடக்கிற்கு செல்ல பயன்படுத்திய கிராமம் அது.
அதனால் பல தடவை சிங்கள ராணுவத்தின் தாக்குதலுக்குள்ளாகி பல இழப்புகளை சந்தித்த கிராமம்.
எத்தனை இழப்புகளை சந்தித்த போதும் அக் கிராம மக்கள் போராளிகளை தாங்க தவறியதில்லை.
அந்த கிராமத்தில் இருந்து வர்ஜா என்ற சிறுமிக்கு ஜீ டிவியின் சரிகமப நிகழ்வில் பாட வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
கிழக்கு மாகாணத்தை சேர்ந்த சபேசனுக்கு வாய்ப்பு கிடைத்தபோது எந்தளவு மகிழ்ச்சி ஏற்பட்டதோ அதைப் போன்று இப்போது வர்ஜாவுக்கு கிடைக்கும்போது ஏற்படுகின்றது.
இச் சிறுமி இந்த வாய்ப்பை பயன்படுத்தி வெற்றி பெற வேண்டும். நிச்சயம் பெறுவார்.
