கிளிநொச்சி வாழ் மக்களுக்கு வெளியான அவசர அறிவிப்பு-அவதானம் மக்களே..!

 

எலிக்காய்ச்சல் அறிகுறி தென்பட்டால் உடனடியாக வைத்தியசாலை நாடி உயிரிழப்பை தவிர்க்க வேண்டும் என  கிளிநொச்சி பிராந்திய பதில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் சிவஞானசுந்தரம் சேரலாதன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்டத்தின் வெள்ள நிலைமையின் பின்பு மக்களுக்கு தெளிவூட்டுவது தொடர்பான ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

குறித்த ஊடக சந்திப்பினை கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் பதில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் சிவஞான சுந்தரம் சேரலாதன் மற்றும் மாவட்ட சமுதாய மருத்துவர் வைத்தியர் திருமகள் சிவசங்கர் ஆகியோர்  இணைந்து நடாத்தினர்

இது தொடர்பாக அவர்  மேலும் தெரிவிக்கையில்,

தற்போது வெள்ளம் வடிந்து மக்கள் வீடுகளுக்கு செல்கின்ற நிலையில் நீர்ச்சிரங்கு ஏற்படுவதை தவிர்க்க பாதங்களை மெல்லிய சுடுதண்ணீரில்  கொண்டிஸ் பளிங்குகளை  இட்டு பாதங்களை கழுவினால் நீர்ச்சிரங்கு இல்லாது போகும் .

அத்துடன் வெள்ளத்தின் பின்பு எலிக்காய்ச்சல் பரவும் நிலை காணப்படுகின்றது. யாழ்ப்பாணத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.

விவசாயிகள், வெள்ள அனர்த்தங்களில் கடமையாற்றுபவர்கள் பொதுச்சுகாதார பரிசோதகர்களின் ஆலோசணைகளைப் பெற்று வாரம் ஒரு முறை தடுப்பு மருந்தை பெற்றுக்கொள்ள வேண்டும்.

எலிக்காய்ச்சல் அறிகுறியான கடுமையான காய்ச்சல், தலைவலி, வயிற்றுநோ போன்ற அறிகுறிகள் காணப்பட்டால் உடனடியாக கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையை நாடி உரிய சிகிச்சையை பெற்றுக்கொள்ள முடியும் .

குறித்த அறிகுறிகளை கருத்தில் கொள்ளாது இருந்தால் எலிக்காய்ச்சல் காரணமாக மூளை, சிறுநீரகங்கள், ஈரல் பாதிக்கப்பட்டால் மரணம் நிச்சயம் ஏற்படும்

வாந்தி, பேதி, நெருப்புகாய்ச்சல்,  செங்கண் மாரி  போன்றவை ஈக்களின் கழிவுகளில்  குறித்த நோய்கள் ஏற்படுகின்றன.

மழை ஓய்ந்து ஏற்படுகின்ற வெய்யில் காரணமாக நுளம்பு முட்டை இட்டு டெங்கு போன்ற நோய்களும் ஏற்பட வாய்ப்புள்ளது.

நுளம்பு பரவக்கூடிய சூழலை இல்லாது வைத்திருக்க வேண்டியது அவசியமாகும். 

சிறு குழந்தை ஆறு மாதத்திற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு அதிக குளிர்காரணமாக சீனியின் அளவு குறைந்து இறப்பு கூட ஏற்படலாம் தாய்மார்கள் அவதானமாக குழந்தையை பராமரிக்க வேண்டும் .

மக்களுக்கான சுகாதார ஆலோசணைகளை வழங்குவதற்கு மாவட்டத்திலுள்ள நான்கு சுகாதாரவைத்திய அதிகாரிகளை (கரைச்சி -0774433172,கண்டாவளை -0777252136,பூநகரி -0772364680,பளை-0776630613) என்ற தொலைபேசி இலக்கங்களினுடாக எப்பொழுதும் தொடர்பு கொள்ளமுடியும் என அவர் மேலும்  தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

Related Post
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
Site is Blocked
Sorry! This site is not available in your country.