.திருகோணமலையில் துப்பாக்கி சூட்டில் நபரொருவர் மரணம்!!
திருகோணமலை ஐந்தாம் கட்டை பகுதியில் இனம் தெரியாதோர் நடாத்திய துப்பாக்கி சூட்டில் தொழிலதிபரொருவர் (01) உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் அதே பகுதியைச் சேர்ந்த எச்.டபிள்யூ.பிரசன்ன (61வயது) எனவும் தெரியவந்துள்ளது.
சடலம் அவரது கடைத் தொகுதியில் காணப்படுவதாகவும் மரணத்துக்கான காரணம் தொடர்பில் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் தெரிய வந்துள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் சீனக்குடா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
