உடற்கூற்றுப் பரிசோதனையின் பின்னர் உடல் உறவினர்களிடம் கையளிப்பு!
நெடுந்தீவு துறைமுகத்தில் நேற்று (டிசம்பர் 10) காலை யாழ்நகர் செல்வதற்காக பொருட்களுடன் மாவிலி துறைமுகத்தில் படகேறச் சென்றபோது குறுக்காக கட்டப்பட்ட கயிறு தடக்கி கடலில் வீழ்ந்து உயிரிழந்தவரின் உடல் யாழ் போதனா வைத்தியசாலையில் உடற்கூற்றுப் பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டு நெடுந்தீவுக்கு எடுத்துச்செல்லப்பட்டது.
இவ்வாறு உயிரிழந்தவர் நெடுந்தீவு 15 ஆம் வட்டாரத்தினைச் சேர்ந்த பரராசசிங்கம் பிறேமகுமார் என்பவராவார்.



