திஸ்ஸ - மாத்தறை பிரதான வீதியில், ஹம்பாந்தோட்ட பெருநகர வைத்தியசாலைக்கு அருகாமையில், கதிர்காமம் நோக்கி சென்றிருந்த இலங்கை போக்குவரத்துக்குச் சொந்தமான பொதுப் பேருந்தொன்று, வீதியின் நடுவில் இருந்த மாடொன்றை மோதி, எதிர்வழித் திசை ஊடாக சென்று அருகிலிருந்த தோட்டமொன்றுக்குள் புகுந்து நிற்க நேர்ந்தது.
இச்சம்பவம் இன்று (07) ஏற்பட்டது.
பயணிகளுக்கு எதுவித அனர்த்தமும் நிகழவில்லை என தெரியவருகிறது.
