டிட்வா சூறாவளியுடன் தொடர்புடைய வெள்ளப் பெருக்கினால் இலங்கையில் உள்ள 12 கட்டிடங்களில் 1 கட்டிடம் வெள்ளப் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் சுமார் 720,000 கட்டிடங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வுகள் மூலம் மதிப்பிடப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவற்றில் 243 மருத்துவமனைகளும் (இலங்கை சுகாதார அமைச்சின் மதிப்பீட்டின்படி) நூற்றுக்கணக்கான கல்வி நிலையங்களும் உள்ளடங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கம்பஹா மாவட்டத்தில் உள்ள ஜா-எல பிரதேச செயலகப் பிரிவு அதிகளவிலான பாதிக்கப்பட்ட கட்டிடங்களைப் பதிவு செய்துள்ளது.
இங்கு 44,000க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் வெள்ளப் பாதிப்புக்கு உள்ளாகின.
அத்துடன், கொழும்பு மாவட்டத்தில் உள்ள கொலன்னாவ மற்றும் கடுவெல, கம்பஹா மாவட்டத்தில் உள்ள கட்டான மற்றும் வத்தளை ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளிலும் தலா 35,000க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் வெள்ளப் பாதிப்பை எதிர்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
