நாட்டில் நிலவிய மோசமான வானிலை தணிந்திருந்தாலும், சில பகுதிகளில் நிலச்சரிவுகள், மண் சரிவுகள் மற்றும், விரிசல்கள் இன்னும் பதிவாகி வருவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதுபோன்ற நிலைமைகள் பதிவாகினால், மக்கள் உடனடியாக அந்த இடங்களை விட்டு வெளியேற வேண்டும் என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் நிலச்சரிவு ஆராய்ச்சி பிரிவின் இயக்குநர் காமினி ஜயதிஸ்ஸ தெரிசித்துள்ளார்.
மேலும் கண்டி, கேகாலை, குருநாகல் மற்றும் மாத்தளை மாவட்டங்களில் மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை இன்னும் நடைமுறையில் உள்ளது.
