பெற்ற தாய்க்கு மகன் நடத்திய கொடூரம்-அதிர்ந்து போன கிராமம்..!

 ஒடிசா மாநிலம் பத்ரக் மாவட்டத்தை சேர்ந்தவர் டேபாசிஷ் நாயக்(வயது 45). இவர் மது மற்றும் போதைப்பொருள் பழக்கத்திற்கு அடிமையாக இருந்துள்ளார்.

அவரது தாய் ஜோத்ஸ்நரனி நாயக்(வயது 65) தனது சேமிப்பு பணத்தை அவ்வப்போது டேபாசிஷ் நாயக்கிடம் கொடுத்து வந்துள்ளார்.

பெற்ற தாய்க்கு மகன் நடத்திய கொடூரம் ; அதிர்ந்து போன கிராமம் | The Cruelty Committed By A Son Against His Mother

இந்த நிலையில் இன்றும் தனது தாயிடம் மது குடிப்பதற்காக டேபாசிஷ் பணம் கேட்டுள்ளார். அப்போது ஜோத்ஸ்நரனி தன்னிடம் பணம் இல்லை என்று கூறியிருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த டேபாசிஷ், தனது தாயின் உடலில் பெட்ரோலை ஊற்றி தீயை பற்ற வைத்தார்.

உடல் முழுவதும் தீ பற்றி எரிந்த நிலையில், வலியால் ஜோத்ஸ்நரனி அலறித் துடித்தார். இதைக் கேட்டு அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். இதற்குள் டேபாசிஷ் நாயக் அங்கிருந்து தப்பியோடினார்.

இதையடுத்து பலத்த தீக்காயங்களுடன் ஜோத்ஸ்நரனி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தப்பியோடிய டேபாசிஷை பொலிஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.  

கருத்துரையிடுக

Related Post
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
Site is Blocked
Sorry! This site is not available in your country.