துயரச் செய்தி: இளம் மணமகன் விபத்தில் உயிரிழப்பு
திருகோணமலை–மட்டக்களப்பு பிரதான வீதியில் உள்ள சீனக்குடா பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற கோர விபத்தில், ஜமாலியாவை சேர்ந்த 27 வயது இளைஞர் ராசித் உயிரிழந்தார் இவர் திருகோணமலையில் நன்கு அறியப்பட்ட உதைப்பந்தாட்ட வீரர் ராஜ்கபூர் அவரின் மகனும் ஆவார் .
மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்தபோது, இராணுவ லோரி மோதியதில் இவர் துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்தார்.
அன்னார் திருமணம் செய்து ஒரு மாதம்கூட ஆகவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
இளம் வயதிலேயே மனைவியையும் குடும்பத்தாரையும் துயரத்தில் ஆழ்த்தி சென்ற இந்தச் சம்பவம் மனதை பதறவைக்கிறது.
ஜனாஸா தற்போது கிண்ணியா தள வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
நல்லடக்கம் இன்று ஜமாலியா மையவாடியில் இடம்பெறும்.
இவ்விபத்து தொடர்பான விசாரணைகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
