வெள்ளிக்கிழமை, 5 டிசம்பர் 2025
மேஷம்
aries-mesham
இன்று, வீண்வாக்கு வாதங்களைத் தவிர்த்தால் வளம் பெருகும். எங்கே தேடுவேன் ? எனப் பணத்தைத் தேடுவீர்கள். எங்கே நிம்மதி ? என பாடக்கூடிய நிலையும் உருவாகலாம்.
ரிஷபம்
taurus-rishibum
இன்று பௌர்ணமி நிலவு போல் உங்கள் முகம் பிரகாசமாக. ஒளிரும். புத்தி சாதுர்யம் ஓங்கும். வாக்குவன்மை ஓங்கி வருமானம் பெருகும். வியாபாரிகள் மற்றவர்களைக் கவரும் வண்ணம் பேசி ஆதாயம் பெறுவர்.
மிதுனம்
gemini-mithunum
கடின உழைப்பின் காரணமாக காலத்திற்கு உணவருந்த முடியாத நிலை ஏற்படும். பிறர் மேல் வெறுப்பு, பொறாமை ஆகியவற்றை அகற்றிக் கொள்வது நல்லது. முன் கோபத்தை அடக்க முன்னேற்றம் ஏற்படும்.
கன்னி
virgo-kanni
தனலாபம் எதிர்பார்த்தபடி அதிகரிக்கும். மனதில் தெய்வ நம்பிக்கை கூடும். சந்தோஷம், இனிய சுற்றுலாப் பயணங்கள் எல்லாம் ஏற்படும். ஆரோக்கியம் மேம்பாடு அடையும்,
மகரம்
capricorn-magaram
இன்று, சோகம் என்றால் என்ன என அறிந்து கொள்வீர்கள். பண இழப்புகளைத் தவிர்க்க எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய நாள். தேவையற்ற அவமானங்கள் ஏற்படும்.
கடகம்
cancer-kadagam
எடுத்த காரியம் அனைத்திலும் வெற்றி கிட்டும். பல வழிகளிலும் அதிக தனலாபம் கிடைக்கும். வியாபாரம், தொழிலில் வரவு அதிகமாகி, மனத்தெம்பும், மகிழ்ச்சியும் நிலவும்.
சிம்மம்
leo-simmam
அரசு ஆதரவு கிட்டும். முக்கியஸ்தர்களின் உதவியால் புதிய வேலைக்கான வாய்ப்புக்கள் தேடிவரும். சாத்திரங்களிலும், மந்திர, தந்திரங்களிலும் தேர்ச்சி ஆகிய நற்பலன்கள் உண்டாகும்.
துலாம்
libra-thulam
கோபத்தைத் தவிர்ப்பது நல்லது. அதன் காரணமாகக் குழப்பங்கள் குறையும். நியாயத்திற்கு மாறாக நடந்தால் நிம்மதி குறையும். உயர் அதிகாரிகளிடம் பணிவாக நடந்தால் அனுகூலமான ஆதாயங்கள் கிடைக்கும்.
மீனம்
pisces-meenam
உற்சாகம் மிகுந்த உன்னத நாளாக இருக்கும். குழந்தைகளின் வசதிகள், படிப்பு ஆகியவை பற்றி அதிக அக்கறை எடுத்துப் பாசத்தைப் பொழிவீர்கள். தன்னம்பிக்கையால் வெற்றி கிட்டும்.
தனுசு
sagittarius-thanusu
தொழில் விரிவாக்கத்தால் வருமான உயர்வுகளை எதிர்பார்க்கலாம். விரும்பிய பொருட்கள் வீடு வந்து சேரும். ஆணையிடும் அதிகாரபதவி கிடைக்கலாம்.
விருச்சிகம்
scorpio-viruchagam
பலவகைகளிலும் பண வருமானம் பெருகும். விரைவில் திருமண ஏற்பாடுகள் நடக்கலாம். வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டு. மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவர்.
கும்பம்
aquarius-kumbam
வாகன சுகம் குறையும். அன்னையின் உடல் நலத்தில் அக்கறை கொள்ளுங்கள். ஒருவித பய உணர்வும், தூக்கம் இன்மையும் ஏற்படும். பொருள்களைக் காப்பது அவசியம்.
.jpeg)