4 மாவட்ட மக்களை வெளியேற உத்தரவு-இலங்கையில் தொடரும் அச்சநிலை..!

 

மத்திய, வடமேல் மாகாணங்களில் உள்ள கண்டி, கேகாலை, குருநாகல், மாத்தளை ஆகிய மாவட்டங்களில் அபாயமுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களைப் பாதுகாப்பான மையங்களுக்கு உடனடியாக அப்புறப்படுத்த தேசிய அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம், மாவட்டச் செயலாளர்களுக்கு அறிவித்துள்ளது. 

தற்போது நிலவும் மழையுடனான வானிலை காரணமாக, தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம், மேற்கண்ட நான்கு மாவட்டங்களில் அடையாளம் காணப்பட்ட பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு மண்சரிவு அபாயம் குறித்த சிவப்பு எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. 

இந்த எச்சரிக்கையின் அடிப்படையில், அந்தப் பகுதிகளில் வசிக்கும் மக்களை டிசம்பர் 9 ஆம் திகதி முதல் டிசம்பர் 19 ஆம் திகதி வரை பாதுகாப்பான தற்காலிக மையங்களுக்கு அப்புறப்படுத்துமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மாவட்டச் செயலாளர்களுக்குத் தெரிவித்துள்ளது. 

இந்த மக்களை வெளியேற்றும் நடவடிக்கைகளை மாவட்டச் செயலாளர், தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவன அதிகாரிகள், பிரதேச செயலாளர், கிராம உத்தியோகத்தர், இலங்கை பொலிஸ் மற்றும் ஏனைய தொடர்புடைய தரப்பினரின் ஒருங்கிணைப்புடன் மேற்கொள்ளுமாறு அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவுறுத்தியுள்ளது. 

மக்கள் பாதுகாப்பான மையங்களுக்கு அப்புறப்படுத்தப்பட வேண்டிய பிரதேச செயலாளர் பிரிவுகள் பின்வருமாறு: 

கண்டி மாவட்டம்: ஹத்தரலியத்த, யடிநுவர, உடுதும்பர, பாதஹேவாஹேட்ட, மெததும்பர, பஸ்பாகேகோரளை, தெல்தோட்ட, பூஜாபிட்டிய, கங்கஇஹல கோரளை, பன்வில, கங்கவட்ட கோரளை, உடபலாத்த, ஹாரிஸ்பத்துவ, குண்டசாலை, மினிப்பே, தொழுவ, தும்பனே, அக்குரணை, உடுநுவர மற்றும் பாததும்பர. 

கேகாலை மாவட்டம்: கேகாலை, கலிகமுவ, மாவனெல்ல, புலத்கொஹுபிட்டிய, அரநாயக்க, யட்டியாந்தோட்ட, ரம்புக்கனை, வரகாபொல. 

குருநாகல் மாவட்டம்: மாவத்தகம, மல்லவப்பிட்டிய, ரிதிகம. 

மாத்தளை மாவட்டம்: நாவுல, வில்கமுவ, பல்லேபொல, அம்பன்கங்ககோரளை, லக்கல, பல்லேகம, உக்குவெல, இரத்தோட்ட, மாத்தளை மற்றும் யடவத்த. 

இதற்கிடையில், நாட்டின் மீது வடகிழக்குப் பருவமழை படிப்படியாக நிலைபெறுவதால், இன்று (09) வடக்கு, வடமத்திய, கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் இடைக்கிடையே மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

இந்த மழை நிலைமை டிசம்பர் 19 ஆம் திகதி வரை நீடிக்கலாம் என அதன் முன்னறிவிப்புப் பிரிவின் பணிப்பாளர் மெரில் மென்டிஸ் தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

Related Post
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
Site is Blocked
Sorry! This site is not available in your country.