கார்த்திகை தீபம்-இன்றைய ராசிபலன்{4.12.2025}

 

வியாழக்கிழமை, 4 டிசம்பர் 2025
மேஷம்
aries-mesham
எதிர்பார்த்த இடங்களில் இருந்து பணவரவு தாமதப்படும். கண்ணில் பிரச்சனை எழலாம். மாணவர்களுக்குக் கவனச் சிதறல்கள் ஏற்பட்டு, அதன் காரணமாகக் கல்வியில் தடைகள் ஏற்படலாம்.
ரிஷபம்
taurus-rishibum
வியாபாரத்தில் பணம் சம்பாதிக்கும் திறன் அதிகரிக்கும். புதிய யுக்திகளைக் கையாண்டு வாடிக்கையாளரைக் கவர்வர். வாக்கு வன்மையால் வளம் பெருகும். பயணங்கள் பயன் தரும்.
மிதுனம்
gemini-mithunum
வரவு 8 அணா, செலவு 10 அணா என வரவுக்கு மிஞ்சிய செலவுகள் ஏற்படும். உறவுகள் மீது தேவையற்ற பகை உணர்ச்சி ஏற்படும். சினம் தணிந்தால் சிக்கல்கள் தீரும். பாவையரால் பணவிரயம் ஏற்படும்.
கன்னி
virgo-kanni
தெய்வபக்தியால் மனநிம்மதி கூடும். ஆடம்பர சாதனங்கள் வாங்கி மகிழ்வீர்கள். வெளியூர்ப் பயணங்கள் வெற்றிகரமாக அமையும். வாழ்க்கையில் புதிய பல முன்னேற்றங்கள் உருவாகும்.
மகரம்
capricorn-magaram
மாணவர்களுக்குக் கல்வியில் மிகுந்த அக்கறை தேவை. மற்றவர்கள் குறை கூறாத அளவுக்கு நல்லபடியாக நடந்து கொள்வது நல்லது. துன்பம் வந்தாலும் சிரிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்.
கடகம்
cancer-kadagam
பணவரவு அதிகரித்துப் பரவசப்படும் நாள். மனம் விரும்பிய மங்கையின் அருகாமை மகிழ்ச்சி அளிக்கும். தம்பதிகள் பிரிவால் ஏற்பட்ட பிளவு சரியாகி இணைந்தே மகிழ்வர்.
சிம்மம்
leo-simmam
எல்லாக் காரியங்களும் அனுகூலமாகும். அரசு ஆதரவு, ஆரசு உத்தியோக வாய்ப்பு ஆகியவை கிடைக்கும். தேகதிடம், தைரியம் எல்லாம் ஓங்கும். முன்னேற்ற வாய்ப்புக்கள் கதவைத் தட்டும்.
துலாம்
libra-thulam
நியாயமாக நடக்கவேண்டிய நாள். கணவன் மனைவியிடையே கருத்துவேறுபாடுகள் எழலாம். கடமை தவறாது நடந்து அதிகாரிகளிடம் பணிவாகவும் நடந்தால் பணியில் சாதகமான சூழல் உருவாகும்.
மீனம்
pisces-meenam
அனைத்து வகையிலும் சகோதர்களின் முழு ஓத்துழைப்புக் கிடைக்கும். புதிய ஆடை, ஆபரணங்கள் சேரும். புதிய நண்பர்களைப் பெறுவீர்கள். மனைவியின் உதவி பெற்று மகிழ்வீர்கள்.
தனுசு
sagittarius-thanusu
அனைத்து வளங்களும் சேரும். தனவரவு கூடும். புதிய பந்தங்கள், திருமண உறவுகள் ஏற்படும். தனக்கென அழகிய வீடு அமையும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நிறைவேறும்.
விருச்சிகம்
scorpio-viruchagam
பாக்கிய விருத்தி ஏற்படும். சாதுர்யமான பேச்சால் அனைவரையும் கவர்ந்திடுவீர்கள். செல்வ நிலை சீராக உயரும். அரசுப் பணியாளர்கள் பதவி உயர்வினை எதிர்பார்க்கலாம்.
கும்பம்
aquarius-kumbam
தாயின் உடல் நிலையில் சிறப்பு கவனம் தேவை. முயற்சிகளில் ஏற்படக்கூடிய தடை, தாமதங்களைக் கண்டு துவண்டுவிடாமல், தன்னம்பிக்கையுடன் செயல்பட்டால் வெற்றி நிச்சியம்.

கருத்துரையிடுக

Related Post
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
Site is Blocked
Sorry! This site is not available in your country.