யாழில் நண்பியுடன் உடலுறவு கொள்ளும் மாணவி-11 லட்சத்தை இழந்த தந்தை-நடந்து என்ன?

யாழில் தந்தையின் வங்கிக் கணக்கில் இருந்த பணத்தை அவரது கைத் தொலைபேசியைப் பயன்படுத்தி ஒன்லைன் வங்கிப் பணப்பரிமாற்றம் ஊடாக வேறு ஒரு கணக்குக்கு பரிமாற்றம் செய்துள்ளாள் யாழில் நகரப்பகுதியில் உள்ள பிரபல பாடசாலையின் 17 வயதான மாணவி.

யாழ்ப்பாண வங்கி ஒன்றிற்கு ஒரு சில நாட்களு்ககு முன் வந்திருந்த வர்த்தகர் ஒருவர் தனது வங்கிக் கணக்கிலிருந்து 11 லட்சம் ரூபா பணம் இனந்தெரியாத ஒரு கணக்கிற்கு ஒன்லைன் மூலம் மாற்றப்பட்டுள்ளது எனவும் அந்தக் கணக்கிற்கு தான் எந்தவித பணப்பரிமாற்றமும் செய்யவில்லை எனவும் தெரிவித்து ரகளைகள் செய்யத் தொடங்கியுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பாக தீர விசாரணை செய்த வங்கி நிர்வாகம் வங்கிக் கணக்கிற்கு பணம் மாற்றப்பட்டது கைத் தொலைபேசி அப் மூலமே என்றும் அதுவும் நள்ளிரவு 11 மணியளவில் பணப்பரிமாற்றம் நடந்துள்ளது எனவும் வர்த்தகருக்கு தெரிவித்துள்ளது. 

தனது தொலைபேசி தனது பொறுப்பில் வீட்டில் வைத்திருந்த போது எவ்வாறு பணப்பரிமாற்றம் நடைபெற்றிருக்கும் என வர்த்தகர் அங்கிருந்து தர்க்கம் புரியத் தொடங்கவே வங்கி நிர்வாகம் பொலிசாரிடம் முறையிட ஆயத்தமானது. 

அதே நேரம் மீண்டும் ஒரு முறை வீட்டில் தீர விசாரணை செய்து வருமாறும் கூறியது. தமது வங்கி அல்லாது இன்னொரு வங்கி கணக்கிற்கு குறித்த பணம் அனுப்பப்பட்டுள்ளதால் அந்தக் கணக்கு விபரங்கள் தமக்கு தெரியாது என வங்கி கூறியுள்ளது. 

இதனையடுத்து அங்கிருந்து சென்ற வர்த்தகர் வீட்டுக்குச் சென்று விசாரணைகளை மேற்கொண்ட போது வர்த்தகரின் மூத்த மகளே குறித்த பணத்தை மற்றொரு கணக்கிற்கு மாற்றியது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

வர்த்தகரை தொடர்பு கொண்டு விசாரணைகளை செய்த போதே தனது மகள் கணக்கு பரிமாற்றம் செய்துள்ளதாக வர்த்தகர் கூறியுள்ளார். 

வர்த்தகரின் மகளின் பாடசாலை நண்பியின் தாயின் கணக்கிற்கே குறித்த பணம் மாற்றப்பட்டுள்ளது. 

வர்த்தகரின் மகளும் நண்பியும் ஓரினச்சேர்க்கையாளர்கள் என்பதும் பல தடவைகள் அவர்களை வர்த்தகர் எச்சரித்து பிரிக்க முயன்றதும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 

நண்பி மீதான தீராத காதலால் மாணவி குறித்த பணத்தை பரிமாற்றம் செய்துள்ளதும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. 

தற்போது தனது மகளை ஏமாற்றி பணம் பெற்றமை தொடர்பாக வர்த்தகரால் பொலிசாரிடம் முறையிடப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.

கருத்துரையிடுக

Related Post
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
Site is Blocked
Sorry! This site is not available in your country.