அரச சேவை, மாகாண அரச சேவை மற்றும் கூட்டுத்தாபனங்கள் மற்றும் சபைகளுக்கு சுமார் 70,000 பேரை ஆட்சேர்ப்பு செய்வதற்கான அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது.
பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் சந்தன அபேரத்ன இதனை தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று (19.11.2025) நடைபெற்ற பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் 2026 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டு மசோதா மீதான குழு அமர்வுகளின் விவாதத்தின் போது அவர் இதனைத் குறிப்பிட்டுள்ளார்.
அரச ஊழியர்களில் பட்டதாரிகளுக்கு ஆட்சேர்ப்பு செய்ய அதிக எண்ணிக்கையிலான வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதற்கமைய,12,309 பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்கான ஒப்புதல் பெறப்பட்டுள்ளது என மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
