மன்னார் பொற்கேணியை சேர்ந்த அமரர் திரு. இரவீந்திரன் 3/11/2025 இரவு பரிகாரிகண்டல் பகுதியில் இடம்பெற்ற டிப்பர் வாகனம் மற்றும் ஆட்டோ விபத்தில் உயிரிழந்ததுடன்,அவருடன் பயணித்த அவரது மருமகன் படுகாயம் அடைந்துடன் ஆட்டோ சாரதியும் காயமடைந்தார்.
மேலதிக சிகிச்சைக்காக வவுனியா மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
உயிரீழந்தவரின் சடலம் மன்னார் மருத்துவமனையில் உடற்கூற்று பரிசோதனையின் பின் உறவினர்களிடம் ஓப்படைக்கப்பட்டது .
இவர் 4 பெண்குழந்தைகளின் தந்தையாவார்.
விபத்து தொடர்பீன விசாரணை காவல் துறையினர் மேற்கொண்டுள்ளனர்.

