பதுளை, வால்போதியா அருகே உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மோதிய கார் - வீதியால் வந்த இரு குழந்தைகள் உட்பட சாரதிக்கும் காயம்
பதுளை, வல்போதிய அருகே உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இன்று (20) கார் ஒன்று சுவரில் மோதியதில், காரின் ஓட்டுநர் மற்றும் அந்த வழியாகச் சென்ற இரண்டு சிறு குழந்தைகள் காயமடைந்து பதுளை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
பிரதான சாலையில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்குள் நுழையும் போது, அதிக வேகத்தில் வந்த கார் கட்டுப்பாட்டை இழந்த நிலையில் சுவரில் மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.


