பெங்களூருவின் பாகலூரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில், வீட்டு வேலைக்கார பெண் ஒருவர் லிஃப்டுக்குள் இருந்த நாய்க்குட்டியை தரையில் மோதி கொன்றுள்ளார்.
இந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் அக்டோபர் 31 அன்று நடந்தது.
சம்பவம் சமீபத்தில் சிசிடிவி காட்சிகள் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது..
இந்த கொடூரமான சம்பவம் சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்படுகிறது.
வீட்டுப் பணியாளரின் செயல் உயிரினங்கள் மீதான பரிவின் முக்கியத்துவத்தை மீண்டும் நினைவூட்டியுள்ளது.
இறந்த நாய்க்குட்டியின் உரிமையாளர் ராஷி பூஜாரி, இந்த கொடூரச் செயலில் ஈடுபட்ட பணிப்பெண் மீது போலீசில் புகார் அளித்துள்ளார்.
