அஸ்வெசும-அலைந்து திரியும் ஏழை எளிய மக்கள்-ஏன் இந்த அவலம்-வெளியான பகீர் தகவல்கள்

அஸ்வெசும மீள் பதிவால் அப்பாவி மக்கள் படும்பாடு

அஸ்வெசும தகவல்கள் மீள் விண்ணப்ப படிவம் 

Online-ல் விண்ணப்பிக்கும் படி தெருத்தெருவாகவும், விண்ணப்பக்கடைகளைத் தேடியும், கொமினிக்கேசனுக்கும்,

கிராமசேவகரின் காரியாலயத்தை நோக்கியும், அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் உதவியை நாடியும் அப்பாவி மக்கள் அங்குமிங்கும் அலைகிறார்கள்...

சம்பந்தப்பட்ட  பயனாளிகளாகிய பொது மக்களை அவசரப்படுத்தி இன்றைய தினத்திற்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று சில அதிகாரிகள் கூறியுள்ளதால் அலைக்கழிந்து திரிகிறார்கள்....

முடிவுத்திகதி:

எதிர்வரும் டிசம்பர் மாதம், 10ஆம் திகதி.  

ஏன் இந்த மக்களை அவதிப்படுத்துகிறார்கள்?

யார் அவதிப்படுத்துகிறார்கள்?

அல்லது அஸ்வசும திட்டத்திலிருந்து மக்கள் தொகையை குறைப்பதற்கான மறைமுக சதியா?

Online என்றால் என்ன? மொபைல் போனைப்பற்றி தெரியாத பாமரர்களின் நிலைதான் என்னவாகும்?

சம்பந்தப்பட்ட மக்களை உரிய அதிகாரிகள் ஓரிடத்திற்கு அழைத்து மீள் பதிவை செய்தால் என்ன?

அதிகாரிகளுக்கு அப்படிச் செய்ய அனுமதி இல்லையா?

அலைந்து திரியும் மக்கள் பலர் சொல்லுகிறார்கள்.... எங்களுக்கு இந்த அஸ்வெசும வேண்டாம் என்று. காலையிலிருந்து எங்களுக்கு அலைந்து திரிந்தும் ஏலாது... பலர் இன்னும் காலை காலை உணவைக்கூட சாப்பிடாமல் அலைகிறார்கள்.

ஒரு முறைதான் விண்ணப்பிக்க முடியும். ஒரு பிழை ஏற்பட்டால்?

மீள் விண்ணப்பமானது ரத்தாகும். வாய்ப்புள்ளது.

பாவமல்லோ_மக்கள்!

பொறுப்புவாய்ந்த அதிகாரிகரிகளே!

தயவுசெய்து உங்களுடைய கடமையை உணர்ந்து செயற்படுங்கள்.

அப்பாவி மக்களின் மனவேதனை யாரையும் சும்மா விடாது!

கருத்துரையிடுக

Related Post
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
Site is Blocked
Sorry! This site is not available in your country.