வெலிகந்த மஹவெலிதென்ன பகுதியில் லோடர் ஒன்று கவிழ்ந்ததில், அதன் சாரதி அந்த வாகனத்தின்கீழ் சிக்கி பரிதாபமாக உயிரிழந்ததாக கடந்த (02) ஆம் திகதி நிகழ்ந்த விபத்துச் சம்பவம் தொடர்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த லோடர், ஆற்றங்கரைத் தடுப்பை உயர்த்தும் பணியில் ஈடுபட்டிருந்தபோது எதிர்பாராத விதமாக
கவிழ்ந்ததாக கூறப்படுகிறது.
உயிரிழந்தவர் வெலிகந்த பெரகும்யாய பகுதியைச் சேர்ந்தவரென்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.மேலதிக விசாரணைகள் தொடர்கின்றன.


