♦யாழ்ப்பாணம் குப்பிலான் பிரதேசத்தைச் சேர்ந்த தவில் வித்துவான் (மேளம் அடிப்பவர்) ஒருவர் கைது செய்யப்பட்டு இருக்கின்றார்.
♦இவருக்கு கடந்த சில மாதங்களாக கொலை செய்யப்பட்ட தீபாவுடன் பழக்கம் ஏற்பட்டு தொலைபேசியில் அடிக்கடி பேசி வந்திருக்கிறார்கள்.
♦ பின்னர் இந்த உறவு நேரில் சந்தித்துக் கொள்ளும் அளவுக்கு வளர்ந்திருக்கிறது
♦சம்பவத்தன்று தீபாவை யாழ்ப்பாணம் செயலகத்துக்கு முன்பாக வரவழைத்து சுசூகி வாகர்ன் ஆர் கார் ஒன்றை வாடகைக்கு பெற்று அதில் தீபாவையும் ஏற்றிக் கொண்டு சங்குப்பிட்டி பூநகரி பாதைய ஊடாக கிளிநொச்சி நோக்கி பயணித்திருக்கிறார்கள்.
♦ கிளிநொச்சியில் இருவரும் நேரத்தை கழித்து விட்டு மீண்டும் பூநகரி ஊடாக பயணம் செய்திருக்கிறார்கள். அப்போது பூநகரியில் வைத்து குளிர்பானம் ஒன்றில் மயக்க மருந்து போட்டு தீபாவிடம் தவில் வித்துவான் கொடுத்துள்ளார்
♦ அதை குடித்த தீபா காரில் மயங்கிச் சரியவே சங்குப்பிட்டி பாலத்தின் அருகில் வந்து தீபாவின் உடலை கடலில் வீசிவிட்டு
♦மீண்டும் அவர் கிளிநொச்சி சென்று அங்கு தடயங்களை அழித்துவிட்டு யாழ்ப்பாணம் வந்துவிட்டார்.
♦தீபாவின் உடம்பில் இருந்த 10 சவரன் தங்க நகைகளை சுன்னாகம் பிரதேச தனியார் நிறுவனம் ஒன்றில் 17,00,000 ரூபாய்க்கு அடைப்பு வைத்துள்ளார்.
♦ போலீசார் குறித்த நகைகளை மீட்டு உள்ளனர் தவில் வித்துவானை நீதிமன்ற காவலில் எடுத்திருக்கின்றார்கள்.
♦சந்தேக நபர் வாடகைக்கு எடுத்துச் சென்ற கார் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றது
♦குறித்த தவில் வித்வான் பெண்களிடம் பழகி பின்னர்மிரட்டி தங்க நகைகளை பறிப்பதை வழமையாக கொண்டிருப்பதாக விசாரணையில் தெரிய வந்துள்ளதாக கிளிநொச்சிப் போலீசார் தெரிவித்துள்ளனர்.
