இளம்பெண்ணின் தலையில் கத்தியை வைத்து கொடூரமாக குத்தி அரை நிர்வாணமாக வாழைதோப்பில் புதைத்த இளைஞர்..
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே சந்தியபாளையம் கிராமத்தில் உள்ள வாழைத்தோட்டத்திற்குள் தலைமுடி வெளியே தெரிந்த நிலையில் அரை நிர்வாணமாக பெண்ணின் உடல் புதைக்கப்பட்டு இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது..
சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் பெண்ணின் சடலத்தை தோண்டி எடுத்துப் பார்த்தனர். அப்போது அந்தப் பெண்ணின் கழுத்து தலைப்பகுதியில் கத்தியால் குத்தப்பட்ட காயம் இருந்தது.
இந்த கொலை சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் உடனடியாக விசாரணையை தொடங்கினர்.
இதன்படி கொல்லப்பட்டது ஆப்பக்கூடல் பகுதியைச் சேர்ந்த சோனியா (வயது 35) என்பது தெரிய வந்தது..
