நெஞ்சை உலுக்கும் சம்பவம் அகமதாபாத்தில் நடந்த ஏர் இந்தியா விமான விபத்தின் ஒரே உயிர் தப்பியவர் விஸ்வஷ்குமார் ரமேஷ், ஸ்கை நியூஸ் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தனது வலியைப் பகிர்ந்துகொண்டார்.விபத்து நடந்து கிட்டத்தட்ட நான்கு மாதங்கள் ஆகியும் உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் இன்னும் துன்பப்படுவதாகக் கூறினார்.
தனது இளைய சகோதரர் அஜய் உயிரிழந்தது இன்னும் நம்ப முடியவில்லை என்று கண்ணீருடன் தெரிவித்தார். "அவர் எனக்கு எல்லாமே… எனது முதுகெலும்பு போன்றவர்… இன்னும் அவர் இல்லை என்று நம்ப முடியவில்லை" என்று வேதனையுடன் பேசினார். முழங்கால், தோள், முதுகு என உடல் முழுவதும் வலி நீங்கவில்லை, மாடி ஏறுவது கூட கடினமாக உள்ளது என்றார்.விபத்துக்குப் பின் தனது 4½ வயது மகனுடன் சரியாகப் பேசுவதில்லை, ஒரு நாள் முழுவதும் படுக்கையில் அமர்ந்திருப்பதாகவும் ரமேஷ் வெளிப்படுத்தினார். ஜூன் 12 அன்று டையூவிலிருந்து அகமதாபாத் வந்து லண்டன் செல்ல ஏர் இண்டியா விமானம் AI 171-ஐ பயணித்தனர். போயிங் 787-8 ரக விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே மருத்துவக் கல்லூரி வளாகத்தில் விழுந்து நொறுங்கியது.
242 பயணிகளில் 241 பேர் உட்பட தரையில் 34 பேர் உயிரிழந்தனர். 11A இருக்கையில் அவசர வெளியேறும் கதவருகே அமர்ந்திருந்த ரமேஷ், விமானப் பகுதி தரையில் விழுந்து கதவு உடைந்ததும் தப்பினார். விபத்து நடந்த இடத்தில் தொலைபேசியுடன் நடந்து செல்லும் அவரது வீடியோ வைரலானது. ரமேஷின் ஆலோசகர் ராட் சீகர், பிரித்தானிய பிரதமர் கீர் ஸ்டார்மரை ஏர் இண்டியாவை நீதி வழங்க நிர்பந்திக்குமாறு கோரினார். இதனை கேள்விப்பட்ட மக்கள் சோகமாக கருத்து தெரிவித்து வருகிறார்கள்...
