கென்யாவை நிலைகுலைய வைத்த நிலச்சரிவு. மண்ணுக்குள் புதைந்த பல கிராமங்கள்
கென்யாவின் ரிஃப்ட் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட நிலச்சரிவில் 21 பேர் உயிரிழந்துள்ளதோடு 30 பேர் வரையில் காணாமல் போயுள்ளதாக அந் நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன
நேற்று பிற்பகல் இந்த நிலச்சரிவு ஏற்பட்டுள்ள நிலையில் பள்ளத்தாக்கிலிருந்த கிராமங்கள் சில மண்ணில் புதையுண்ட நிலையில் மீட்புப் பணியினை அந் நாட்டு இராணுவமும் பொது மக்களும் முன்னெடுத்து வருகின்றனர்



