யாழ். சுழிபுரம் மேற்குப் பகுதியில் குகன் சங்கம் மற்றும் கலைமகள் விளையாட்டு கழகம் இணைந்து முன்னெடுத்து வரும் பசுமை விவசாயத் திட்டத்தின் பாரிய நிதி நெருக்கடி நீக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில், நிலச் செம்மைப்படுத்தும் பணிகள் காரணமாக, பசுமைக் குழுவானது ரூ. 10,56,795.00 என்ற பெரும் கடன் சுமைக்குள் தள்ளப்பட்டது.
இந்தக் கடன் நெருக்கடியை அறிந்த பிரான்சைச் சேர்ந்த தொழிலதிபர் திரு. கோபாலகிருஷ்ணன் சாந்தகுமாரன் அவர்கள் உடனடியாக முன்வந்து, சுமார் பத்து லட்சம் (10,00,000) ரூபாய் கடனைத் தள்ளுபடி செய்வதாக உறுதியளித்து, பசுமைத் திட்டத்திற்குப் புத்துயிர் அளித்துள்ளார்.
முன்னதாக, 12-10-2025 அன்று பசுமைத் தோப்பிற்கு நேரில் வருகை தந்து நெல் விதைகளை விதைத்த திரு. சாந்தகுமாரன் அவர்கள், நவம்பர் 19, 2025 அன்று மீண்டும் வருகை தந்தார். தாம் விதைத்த நெற்பயிர்களுக்குத் தமது கையாலேயே உரம் இட்டு, இவ் வேலையால் எற்பட்ட 10 லட்சம் ரூபா செலவு ஆவணங்களையும் பெற்றதுடன் இத்திட்டத்தின் மீதான தனது அசைக்க முடியாத அக்கறையையும், களப் பங்களிப்பையும் வெளிப்படுத்தினார்.
பசுமை நிதி ஒருங்கிணைப்பாளர் திரு. நா. சபாரத்தினம் மற்றும் பசுமை களநிலை காசாளர் திரு. க. ரவேந்திரன் ஆகியோர் இக்கணக்குகளை ஒருங்கிணைத்துள்ளனர்.
புலம்பெயர் தேசத்தினரும், தாயக உறவுகளும் இணைந்து மேற்கொள்ளும் இந்தப் பசுமைப் புரட்சிக்குக் கிடைத்த மாபெரும் வெற்றியாகத் திரு. சாந்தகுமாரன் அவர்களின் மகத்தான பங்களிப்பு பார்க்கப்படுகிறது.





