கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே இந்த பயங்கரமான சம்பவம் நடந்துள்ளது.. அங்குள்ள மாதா கோவில் வளாகத்தில் அந்தோணி ஆரோக்கிய ஜோவை பார்த்ததுமே, கிராம மக்கள் கதிகலங்கி போயிருக்கிறார்கள்..இது தொடர்பாக போலீசுக்கும் தகவல் அளிக்கப்பட்ட நிலையில், விசாரணையும் துரிதமாக நடந்து வருகிறது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ளது இருந்தை என்ற கிராமம்.. இங்கு வசித்து வருபவர் அந்தோணி ஆரோக்கிய ஜோ.. இவருக்கு 20 வயதாகிறது.. இவர் நேற்று முன்தினம் இரவு நண்பர்கள் சிலருடன் வீட்டை விட்டு வெளியே சென்றிருக்கிறார்.
அதற்கு பிறகு மறுபடியும் அந்தோணி வீட்டிற்கு வரவில்லை.. நேற்று காலை அந்த பகுதியிலுள்ள மாதா கோயில் வளாகத்தில் அந்தோணியின் சடலம் கிடந்ததை கண்டு அக்கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்..
