சாராயத்துடன் நஞ்சு மருந்து அருந்திய நிலையில் குடும்பஸ்தர் ஒருவர் மீட்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் இன்று தெரிவித்தனர்.
வவுனியா, சமனங்குளம் பாலத்திற்கு அருகாமையில் குடும்பஸ்தர் ஒருவர் மயக்கமடைந்த நிலையில் கிடப்பதை அவதானித்த மக்கள் பொலிசாருக்கு தகவல் வழங்கியதை அடுத்து குறித்த குடும்பஸ்தர் மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வவுனியா, தேக்கவத்தை பகுதியைச் சேர்ந்த குறித்த குடும்பஸ்தர் சாராயத்துடன் வயலுக்கு பயன்படும் களை நாசினி மருந்தை கலந்து அருந்தியுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
குறித்த குடும்பஸ்தர் அருகில் சாராயம், களை நாசினி என்பனவும் மீட்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் வவுனியா பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
