செல்லகதிர்காமம் - கதிர்காமம் பிரதான வீதியில் செல்லகதிர்காமம் நகருக்கு அருகாமையில் இடம்பெற்ற விபத்தில், ஒரு மோட்டார் வண்டி ஓட்டுநருக்கு நித்திரைக் கலக்கம் காரணமாக
விபத்து ஏற்பட்டு வாகனம் சேதமடைந்தது.அதன் காரணமாக வண்டி வீதியில் இருந்து விலகி, பக்கத்தில் இருந்த பழைய மரமொன்றில் மோதி, (17) மதியம் இந்த விபத்து நிகழ்ந்தது.விபத்தில் குறித்த மோட்டார் வண்டியில் பயணித்த இருவரும் காயமடைந்து வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.மேலதிக விசாரணைகள் தொடர்கின்றன.




