அம்பலாங்கொடை நகரில் இன்று (9) வர்த்தக கட்டிடத் தொகுதி ஒன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. தீப்பரவலை கட்டுப்படுத்துவதற்காக காலி மாநகர சபைக்கு சொந்தமான 2 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டு தற்போது தீ கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.
இதனால் ஏற்பட்ட சேத விபரங்கள் வெளியாகவில்லை. தீயை கட்டுப்படுத்துவதில் ஊர் மக்கள், இராணுவத்தினர், பிரதேச வர்த்தகர்கள் ஒத்துழைப்பு நல்கியுள்ளனர்.




