அதி வேகமாக வந்த காரால் உயிரிழந்த நர்சிங் கல்லூரி மாணவி...இந்த விபத்துக்கு காரணம் இரு தரப்பும் என்று தெரிய வந்துள்ளதாக தகவல்
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே நேற்று நடந்த சாலை விபத்தில் நர்சிங் கல்லூரி மாணவி பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த விபத்துக்கு மாணவி சென்ற கார் அதிவேகமாக சென்றதே காரணம் என்று கூறப்பட்டது. அதோடு மாணவியை அழைத்துச் சென்ற ஆண் நண்பருக்கு லேசான காயம் மட்டுமே ஏற்பட்டது.
அண்மைக் காலமாக சொகுசு கார்களில் வேகமாக சென்று இளைஞர்கள் விபத்து ஏற்படுத்துவது தொடர் கதையாகி வருகிறது. வேகமே ஆபத்து என்ற நிலையில், அதனை விட கொடுமையாக, அதீத போதையில் கார் ஓட்டும் போக்கும் தற்போது அதிகரித்து வருகிறது.
திண்டுக்கல் கல்லூரி மாணவி விபத்து குறித்த விசாரணையில், வேகத்துடன் மற்றொரு காரணமும் தெரியவந்துள்ளது. ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த நர்சிங் கல்லூரி மாணவி புவனேஸ்வரி.
இவர் நேற்று காலை வழக்கம்போல் கல்லூரி செல்ல கிளிம்பியுள்ளார். அப்போது வீட்டில் இருந்து புறப்பட தாமதமானதால், தனது ஆண் நண்பர் நந்தக்குமாரை தொடர்பு கொண்டு காரில் கல்லூரியில் இறக்கிவிடுமாறு கேட்டுள்ளார்.
நந்தக்குமாரும் உடனடியாக புவனேஸ்வரியை அவரது குடியிருப்புக்கு அருகே வந்து தனது காரில் ஏற்றிக்கொண்டு சென்றுள்ளார். தொடர்ந்து, புவனேஸ்வரி கல்லூரிக்கு நேரமாகிவிட்டதாக பதற்றப்படவே, நந்தக்குமார் காரை வேகமாக இயக்கியதாக தெரிகிறது.
#viral #car #Accident
