பொலொன்னறுவ – அரளகங்குவில பிரதான வீதியின் மெதகம வீதிக்கு உட்பட்ட பகுதியில் இன்று (26) டிப்பர் வாகனம் ஒன்று பிரதான கால்வாயில் வீழ்ந்தது.
அந்த பகுதியில் உள்ள கடையொன்றிலிருந்து தேநீர் அருந்திய பின்னர், டிப்பர் வாகனத்தின் சாரதி வாகனத்தை பின்னோக்கி இயக்கியபோது கட்டுப்பாட்டை இழந்து கால்வாயில் வீழ்ந்ததாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.
