வலப்பனை பிரதேசத்தில் இன்று (27) ஏற்பட்ட மண்சரிவினால் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
இரண்டு வீடுகள் மண் சரிவில் பாதிக்கப்பட்டு மேற்படி சம்பவம் இடம் பெற்றுள்ளது.
அதேவேளை, கண்டி மாவட்டத்தில் 4 பேர் காணாமல் போயுள்ளதாக மாவட்ட செயலாளர் இந்திக்க உடவத்த தெரிவித்தார்.
உடதும்பறை மற்றும் பாத்த ஹேவாஹெட்ட பிரதேச செயலாளர்கள் பிரிவுகளில் இச்சம்பவங்கள் இடம் பெற்றுள்ளன.
