வெள்ளை அழகியிடம் அந்தரங்க உறுப்பை காட்டிய இளைஞன் தொடர்பில் சற்று முன் வெளியான தகவல்

 

வெளிநாட்டுப் பெண்ணிடம் அத்துமீறி நடந்த நபர் களுவாஞ்சிகுடியில் வைத்து கைது

திருக்கோவில் பகுதியில் வெளிநாட்டு சுற்றுலாப் பெண் ஒருவரிடம் பாலியல் தொல்லை செய்த சம்பவத்தில் தேடப்பட்ட சந்தேக நபரை பொலிஸார் களுவாஞ்சிகுடி பிரதேசத்தில் வைத்து கைது செய்துள்ளனர். 

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 23 வயது திருமணமானவர் என்று பொலிஸார் தெரிவித்தனர். 

இலங்கைக்கு சுற்றுலா வந்த நியூசிலாந்து பெண் ஒருவர், அக்டோபர் 25 ஆம் திகதி சுற்றுலா சென்றிருந்தபோது ஒரு இளைஞர் தகாத நடத்தையில் ஈடுபட்டதாகக் கூறி இலங்கை சுற்றுலா பொலிஸிடம் முறைப்பாடு அளித்திருந்தார். 

இந்த சம்பவத்தின் வீடியோவையும் அவர் சமூக ஊடகங்களில் வெளியிட்டிருந்தார். இது தொடர்பாக சுற்றுலா பிரிவு பொலிஸார் நடத்திய விசாரணையில், சம்பந்தப்பட்ட வெளிநாட்டுப் பெண் அன்று அறுகம்பை யிலிருந்து பாசிக்குடாவுக்குச் சென்றபோது திருக்கோவில் பகுதியில் குறித்த சம்பவம் நடந்ததாக தெரியவந்துள்ளது.

கைது செய்யப்படும் போது சந்தேக நபர் தலையை மொட்டையடித்து தனது தோற்றத்தை மாற்றிக் கொண்டிருந்ததாகப் பொலிஸார் தெரிவித்தனர்


கருத்துரையிடுக

Related Post
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
Site is Blocked
Sorry! This site is not available in your country.