நிந்தவூரில் அதிரடி சுற்றிவளைப்பு: 7.032 கிலோ கேரளா கஞ்சாவுடன் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் கைது
நிந்தவூர் பிராந்தியத்தில் போதைப்பொருள் வர்த்தகத்தை முறியடிக்கும் நோக்கில், நிந்தவூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி AWS. நிஷாந்த வெடகே அவர்களின் தலைமையில் 15.11.2025 அன்று நடத்தப்பட்ட சிறப்பு சுற்றிவளைப்பு, பெரியளவிலான கஞ்சா வர்த்தகத்தை வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளது.
முன்னதாக போதைப்பொருள் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்த ஒரு சந்தேக நபரிடம் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில், நிந்தவூர் பகுதியில் பொலிஸார் விரிவான தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டனர்.
முதல் கைது – 302 கிராம் கஞ்சாவுடன் பெண்
கொடுக்கும் தகவல்களின் பேரில், வீட்டில் கேரளா கஞ்சாவை பணத்திற்கு விற்பனை செய்த குற்றச்சாட்டில் ஒரு பெண் சந்தேக நபர் 302 கிராம் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டார்.
நிலத்தடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 1.5 கிலோ கஞ்சா
தொடர்ந்து, விசாரணையின் போது வீட்டின் பின்னால் நிலத்தடியில் புதைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் பீப்பாயில்
1 கிலோ 50 கிராம் கேரளா கஞ்சா
மறைத்து வைக்கப்பட்டிருந்தது பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டது. இதனுடன் தொடர்புடைய மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
மறைத்து வைக்கப்பட்ட 5.7 கிலோ கஞ்சா கண்டுபிடிப்பு
போதைப்பொருள் கடத்தல் வட்டத்தின் முக்கிய நபராக அடையாளம் காணப்பட்ட சந்தேக நபரின் மகன் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.
அவரின் வாக்குமூலத்தின் பேரில், அருகிலுள்ள வெற்று கானியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த
5 கிலோ 700 கிராம் கேரளா கஞ்சாவும்
பொலிஸாரால் மீட்கப்பட்டது.
தாய், தந்தை, மகன் – என ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நடவடிக்கை நிந்தவூர் பிராந்தியத்தில் நீண்ட காலமாக செயல்பட்டு வந்த கஞ்சா கடத்தல் வலையமைப்பை முறியடிக்கும் வகையில் மிகப்பெரிய வெற்றியாகும் என்றும், தொடர்ந்தும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகள் வலுப்படுத்தப்படும் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
