அதிகரிக்கப்பட்ட கொடுப்பனவு-சற்று முன் அநுர அரசு அதிரடி அறிவிப்பு

 

நாடு முழுவதும் பெய்த கடும் மழையினால் நேற்று மாலை 6 மணி வரையான காலப்பகுதியில் இந்நாட்டிலுள்ள 234,503 குடும்பங்கள் அனர்த்தத்திற்கு உள்ளாகியுள்ளதாக தேசிய அனர்த்த நிவாரண சேவை நிலையத்தின் உதவிச் செயலாளர் ஜயதிஸ்ஸ முனசிங்க தெரிவித்தார். 

இதன் மூலம் 833,985 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். 

அத்துடன் உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தப்பட்ட 159 மரணங்களும், 203 பேர் காணாமல் போயுள்ளதாக இதுவரை பதிவாகியுள்ளதாகவும் அவர் இன்று (30) நடைபெற்ற ஊடக சந்திப்பில் குறிப்பிட்டார். 

அனர்த்தம் காரணமாக இலங்கை முழுவதும் 919 பாதுகாப்பு நிலையங்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்காக சேவைகளை வழங்கி வருவதுடன், 34,198 குடும்பங்களைச் சேர்ந்த 122,822 நபர்கள் இந்த பாதுகாப்பு நிலையங்களில் தங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். 

அத்துடன் நிலவும் சூழ்நிலையில் நிவாரணம் தொடர்பான கொடுப்பனவுகள் திருத்தப்பட்டுள்ளதாகக் கூறிய அவர், அதற்கமைய உலர் உணவுகளுக்கான பணம் வாரத்திற்கு தனி நபரொருவருக்கு ரூபா 1,800 இலிருந்து 2,100 வரையும், 5 பேரை கொண்ட குடும்பமொன்றுக்கு வழங்கப்படும் ரூபா 3,600 தொகையானது 10,500 வரையும் அதிகரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். 

அதற்கமைய பிரதேச செயலாளர்களுக்கும், மாவட்ட செயலாளர்களுக்கும் இந்த எல்லைகளுக்கு உட்பட்டு உலர் உணவுப் பொருட்களை வழங்குவதற்கான வாய்ப்பு உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். 

எவ்வாறாயினும் சமைத்த உணவுகளை வழங்குவதில் உள்ள நடைமுறைகள் அவ்வாறே பேணப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார். 

இதற்கிடையில் அனர்த்த நிவாரண சேவைகள் தொடர்பாக பொதுமக்களுக்கு ஏதேனும் தகவல்களை வழங்குவதற்காக அனர்த்த நிவாரண சேவை நிலையத்தின் நேரடி தொலைபேசி இலக்கமான 0112 665 258 மற்றும் அனர்த்த முகாமைத்துவ பிரிவின் 117 என்ற இலக்கத்தையும் அழைக்க முடியும் என அவர் குறிப்பிட்டார்.

கருத்துரையிடுக

Related Post
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
Site is Blocked
Sorry! This site is not available in your country.