இலங்கை ஆண்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்

இலங்கையின் எயிட்ஸ் மற்றும் எச்.ஐ.வி தொடர்பான தரவுகளுக்கமைய இவ்வருடம் இதுவரையான காலப்பகுதியில் 639 எச்.ஐ.வி தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். கடந்த வருடம் 824 எச்.ஐ.வி தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதுடன் அவர்களில் 724 பேர் ஆண்களாவர். அந்தவகையில் 15 தொடக்கம் 24 வயதுக்குட்பட்ட எச்.ஐ.வி தொற்றுக்கு ஆளாகும் இளம்பருவத்தினரின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துச் செல்வதாக தேசிய பாலியல் பால்வினை நோய்கள் /எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் சமூக வைத்திய நிபுணர் மாதவி குணதிலக்க தெரிவித்தார்.


எதிர்வரும் டிசம்பர் முதலாம் திகதி அனுஷ்டிக்கப்பட உள்ள சர்வதேச எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு புதன்கிழமை (26) சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

வைத்தியர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

ஐக்கிய நாடுகள் சபையின் எய்ட்ஸ் கூட்டுத் திட்டம் வெளியிட்டுள்ள எய்ட்ஸ் மற்றும் எச்.ஐ.வி உலகளாவிய தரவுகளுக்கமைய 2024 ஆண்டு இலங்கையில் 5,700 அண்ணளவானோர் எச்.ஐ.வியுடன் வாழ்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் நாளாந்தம் பதிவாகும் எச்.ஐ.வி நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்வதுடன், கடந்த ஆண்டு மாத்திரம் 824 எச்.ஐ.வி நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இலங்கையில் 1987 ஆம் ஆண்டு முதல் எச்.ஐ.வி தொற்றாளர் அடையாளம் காணப்பட்டதுடன், இதுவரை 7,168 எச்.ஐ.வி நோயாளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 639 எச்.ஐ.வி தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

அதேபோல் கடந்த வருடம் எச்.ஐ.வி தொற்றாளர்கள் என அடையாளம் காணப்பட்ட நோயாளர்களில் சுமார் 724 பேர் ஆண்களாவர். 2010 தொடக்கம் 2024 ஆம் ஆண்டு வரையான தரவுகளை நோக்கும்போது 15 தொடக்கம் 24 வயதுக்குட்பட்ட எச்.ஐ.வி க்கு ஆளாகியுள்ள இளைஞர்கள் மற்றும் யுவதிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பெண்களுடன் ஒப்பிடும் போது ஆண்களிடையே எச்.ஐ.வி தொற்று வெகுவாக அதிகரித்துள்ளது. குறிப்பாக ஆண்பாலின ஈர்பாளர்களிடையே (ஓரின சேர்க்கையாளர்கள்) உறவுகளை ஏற்படுத்திக் கொள்வதால் பலர் எச்.ஐ.வி தொற்றுக்கு ஆளாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. கடந்த வருடம் 50 பேர் இந்நோயால் உயிரிழந்துள்ளதாக பால்வினை நோய்கள் மற்றும் எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டத் தரவுகள் தெரிவிக்கின்றன.

சிரிஞ்சியின் ஊடாக போதைப்பொருள் பாவனையும் சமூகத்தின் அதிகரித்துள்ளது. ஒருவர் பயன்படுத்திய சிரிஞ்சியை ஏனையோர் உபயோகிப்பதால் எச்.ஐ.வி ஏற்பட வாய்ப்புள்ளது. 2010 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2024 ஆம் உலகளாவிய ரீதியில் கண்டறியப்பட்ட புதிய எச்.ஐ.வி நோயாளர்களின் எண்ணிக்கை 40 சதவீதமாக குறைவடைந்துள்ளது. எனினும் 2024 ஆம் ஆண்டு இலங்கையில் அடையாளம் காணப்பட்ட எச்.ஐ.வி நோயாளர்களின் எண்ணிக்கை 48 சதவீதமாக அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. நோய் பற்றிய புரிந்துணர்வு இல்லாமை நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு முக்கிய காரணியாக உள்ளது.

2010 ஆம் ஆண்டு 20 -24 வயதுக்கிடைப்பட்ட 9 எச்.ஐ.வி நோயாளர்கள் அடையாளம் காணப்பட்ட போதிலும் 2024 ஆம் ஆண்டு அவ்வயதுக்குட்பட்ட 91 எச்.ஐ.வி நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். இளம் பருவத்தினரிடையே எச்.ஐ.வி நோயாளர்கள் அதிகளவில் கண்டறியப்படுவது பாரதூரமான விடயமாகும். ஆகையால் உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு இளைஞர்களை இலக்குவைத்து தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளில் விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள தேசிய பால்வினைநோய்கள்/எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டம் நடவடிக்கை எடுத்துள்ளது.

கருத்துரையிடுக

Related Post
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
Site is Blocked
Sorry! This site is not available in your country.