யாழில் கரையொதுங்கிய சிலையால் பரபரப்பு; எங்கிருந்து வந்தது!

 


யாழ்ப்பாண கடற்கரையில் பௌத்த மதத்துடன் தொடர்புடைய சிலை ஒன்று கரையொதுங்கியுள்ளது. வடமராட்சி வளலாய் பகுதியில் கடற்கரையில் ( (Valalai Beach)) இன்றைய தினம் திங்கட்கிழமை குறித்த சிலை கரையொதுங்கியுள்ளது.

சிலையின் கைகள் சேதமடைந்த நிலையில் காணப்படுவதனால் , வேறு நாட்டவர்கள் தங்கள் நாட்டு கடலில் போட்ட சிலையே வளலாய் பகுதியில் கரையொதிங்கி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

அதேவேளை மியான்மார் நாட்டிலும் பௌத்தர்கள் வாழ்கின்ற நிலையில் , அங்கு உயிரிழந்தவர்களின் நினைவாக கடலில் விடப்படும் மூங்கிலிலான தொப்பங்கள் கடந்த காலங்களில் வடமராட்சி பகுதிகளில் கரையொதிங்கியிருந்தன.

அவ்வாறே சேதமடைந்த சிலையை கடலில் போட்ட நிலையில் அந்த சிலை வளலாய் பகுதியில் கரையொதிங்கி இருக்கலாம் என நம்பப்படுகிறது.

குறித்த சிலை தற்போது வளலாய் கடற்தொழிலாளர் சங்க கட்டடத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள நிலையில் , சிலை கரையொதிங்கியமை தொடர்பில்அச்சுவேலி பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ள நிலையில் ,பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

அதேவேளை கடந்த காலங்களிலும் பௌத்த சம்ய தொடர்புபட்ட பொருட்கள் யாழில் கரை ஒதுங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

Related Post
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
Site is Blocked
Sorry! This site is not available in your country.