கிண்ணியாவில் கள்ளச்சாராயம் உற்பத்தி செய்யப்பட்ட இடம் சுற்றிவளைக்கப்பட்ட போது தப்பியோடிய நபர் நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் மீட்பு
கிண்ணியா உப்பாறு களப்பு பகுதியை அண்டிய காட்டுப்பகுதியில் கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்பட்டு வந்த உபகரணங்கள், இயந்திர படகு உட்பட 70லீட்டர் கசிப்பும் (07) கைப்பற்றப்பட்டுள்ளது.
இச் சுற்றி வளைப்பின் போது சந்தேகநபர்கள் தப்பியோடிய நிலையில் கிண்ணியா -ஆலங்கேணி பகுதியைச் சேர்ந்த நபரொருவர் (08) காலை உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.



