இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமான நபருடன், நெருங்கிப் பழகிய இலங்கை மாணவர் ஒருவர் பணத்தை இழந்த அதிர்ச்சி சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
பெங்களூரில் கல்வி கற்கும் 24 வயதுடைய இலங்கை மாணவர் ஒருவர், இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமான நபருடன், நட்புடன் பழகியுள்ளார்.
இதன்போது மேற்கொள்ளப்பட்ட காணொளி அழைப்புகளில் குறித்த நபர் இந்த மாணவனுக்கு தெரியாமல் தனிப்பட்ட அவரது புகைப்படங்கள் மற்றும் தவறான காணொளிகளை இரகசியமாகப் பதிவு செய்துள்ளார்.
அவர் பதிவு செய்த புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை வைத்து, அந்த நபர் குறித்த மாணவனுக்கு மிரட்டல் விடுத்து 36,000 இந்திய ரூபாயைப் பறித்துள்ளார்.
பணம் கொடுத்த பிறகும், மேலதிக பணம் கேட்டு அச்சுறுத்தியுள்ளார்.
காணொளிகளைச் சமூக ஊடகங்களில் வெளியிடுவதாக மிரட்டியதால், கடுமையான மன உளைச்சலுக்கு ஆளான மாணவன் பொலிஸாரிடம் முறைப்பாடளித்துள்ளார்.
பொலிஸார் இந்த இணையவழிப் பாலியல் மிரட்டல் கும்பல் குறித்து மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
