நேற்று மாலை சிலாபம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிலாபம் கடற்கரையில் இருந்த பெண் ஒருவரும் 8 வயது சிறுவனும் அலையில் அடித்துச் செல்லப்பட்டனர்.
இதன்போது பிரதேசவாசிகள் அவர்களை மீட்டு சிலாபம் வைத்தியசாலையில் அனுமதித்த போதும், அந்தப் பெண் உயிரிழந்தார்.இவ்வாறு உயிரிழந்தவர் தங்கொடுவ பிரதேசத்தைச் சேர்ந்த 61 வயதான பெண் என தெரிவிக்கப்படுகிறது.
