தரம்-5 இல் கல்வி கற்கும் மாணவன் தனது புத்தகப் பையில் போதைப்பொருளை எடுத்துச் சென்றுள்ளான்.
சக மாணவர்கள் அவதானித்து அது தொடர்பில் வெளியே கூறியுள்ளனர். குழந்தையின் பையில் போதைப்பொருள் இருப்பது பிடிபட்டது.
குழந்தையின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். தாய் உயிருடன் இல்லாததால் குழந்தை மூலம் போதைப்பொருள் விற்பனை செய்தது தெரியவந்துள்ளது.
இவ்வாறு களனி வித்யாலங்கார சர்வதேச பௌத்த மாநாட்டு மண்டபத்தில் நேற்று நடைபெற்ற 'யெலசிய அபிமன்' நினைவு விழாவில் உரையாற்றும் போதே ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
இங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க,
போதைப் பொருள் இன்று நாம் நினைத்துப் பார்க்க முடியாத துறைகளுக்கும் பரவியுள்ளன. இந்த அச்சுறுத்தலுக்கு எதிராக அரசியல் மற்றும் வாதங்கள் இருக்கலாம்.
ஆனால் இந்த பேரழிவைத் தடுக்க அனைவரும் ஒன்று சேர வேண்டும். கிராமத்திற்கும் விகாரைக்கும் இடையிலான வரலாற்று ரீதியான உறவை தகர்க்க முடியாது.
நாம் தவறு செய்தால், கிராமத்தில் உள்ள விகாரையின் பிக்குவைத்தான் குறை கூறுவோம். கிராமத்திற்கும் விகாரைக்கும் இடையே ஒரு ஆன்மீக உறவும் வரலாற்று பாரம்பரியமும் உள்ளது என தெரிவித்துள்ளார்.
