மத்திய வியட்நாமை கடுமையாக வெள்ளம் தாக்கியுள்ளது
கனமழை மற்றும் திடீர் வெள்ளத்தால் வியட்நாமில் 28 பேர் உயிரிழந்துள்ளதோடு ஆறு பேர் காணாமல் போயுள்ளனர், ஆயிரக்கணக்கானோர் ஹியூ மற்றும் டா நாங் முழுவதும் இடம்பெயர்ந்துள்ளனர்.
நாட்டின் முழு சுற்றுப்புறங்களும் நீரில் மூழ்கியுள்ளன, 245,000 க்கும் மேற்பட்ட மக்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதோடு மேலும் நிலச்சரிவுகள் ஏற்ப்பட்டுள்ளது நிலச்சரிவால் நூற்றுக்கணக்கான வீடுகளை அழித்துள்ளன.
வானிலை ஆய்வாளர்கள் வரும் நாட்களில் அதிக மழை பெய்யும் என்று எச்சரித்துள்ளதால், போக்குவரத்து மற்றும் மின்சாரத்தை மீட்டெடுக்க அதிகாரிகள் போராடி வருகின்றனர்.


