யாழில் வீடு ஒன்றினுள் கயிற்றில் தொங்கிய நிலையில் 27 வயது யுவதி அஜந்திகா சடலமாக மீட்பு!
யாழ். வடமராட்சியில் வீடொன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் யுவதி ஒருவரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது.
கரவெட்டி, துன்னாலை – அல்லையம்பதியைச் சேர்ந்த அழகேஸ்வரன் அஜந்திகா (வயது 27) என்ற யுவதியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சடலம் வைக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு சென்ற கரவெட்டி திடீர் மரண விசாரணை அதிகாரி வேலுப்பிள்ளை பாஸ்கரன் விசாரணைகளை மேற்கொண்டார். சாட்சிகளை நெல்லியடி பொலிஸார் நெறிப்படுத்தினர்.
பிரேத பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட
பருத்தித்துறை கூவில் தீபஜோதி சனசமூக நிலையத்தின் முன்னாள் விளையாட்டுக் கழக தலைவர் திரு.செ.அழகேஸ்வரன் அவர்களின் பாசமிகு மகள் அமரர் அழகேஸ்வரன் அஜந்திகா அவர்கள் இன்று 31.10.2025 (வெள்ளிக்கிழமை) காலமானார். அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம்.
