இந்த ஆண்டின் க.பொ.த. (உ/த) பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்கள் கவனிக்க வேண்டிய சில முக்கிய விஷயங்கள்👇
🔴 பரீட்சை நிலையத்துக்குள் கைபேசி கொண்டு செல்லுதல் கடுமையாகத் தடைசெய்யப்பட்டுள்ளது.
பின்வரும் செயல்களில் ஏதேனும் இடம்பெற்றால், மாணவரின் பரீட்சைப் பெறுபேறுகள் நிறுத்தி வைக்கப்படும், இது உங்கள் பிள்ளையின் எதிர்காலத்தை பாதிக்கக்கூடும்:
1️⃣ கைபேசியை பரீட்சை நிலையத்துக்குள் தம்வசம் வைத்திருத்தல்
2️⃣ Switch off செய்து இருந்தாலும் தம்வசம் வைத்திருத்தல்
3️⃣ மறைவாக ஒளித்து வைத்து, இடைவேளையில் பயன்படுத்தல்
4️⃣ Bluetooth device அல்லது பிற இலத்திரனியல் கருவிகளை கொண்டு செல்வது அல்லது பயன்படுத்த முயற்சித்தல்
🧮 கணக்கீடு, பொறியியல் தொழில்நுட்பம், உயிர்முறைமை தொழில்நுட்பம், தொழில்நுட்பத்திற்கான விஞ்ஞானம் ஆகிய பாடங்களுக்கு மட்டும் நிரல்படுத்தப்படாத கணிப்பான் பயன்படுத்த அனுமதிக்கப்படும்.
மற்ற பாடங்களுக்கு கணிப்பான் பயன்படுத்தக் கூடாது.
📵 பரீட்சை நோக்குநர்களும் கைபேசிகளை கொண்டு செல்லவோ, பயன்படுத்தவோ கூடாது.
👉 பரீட்சை மேற்பார்வையாளர்கள் அவர்கள் கொண்டு வந்த கைபேசிகளை switch off செய்து பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்.
👨👩👧 பெற்றோர்களே, உங்கள் பிள்ளை பரீட்சை எழுதச் செல்லும் முன், கைபேசி, Bluetooth device அல்லது பிற கருவிகள் தம்வசம் இல்லையா என்பதை உறுதி செய்து அனுப்புங்கள்.
அவர்களுக்கு உங்களின் ஆசீர்வாதத்துடன் ஒரு நம்பிக்கையான தொடக்கத்தை அளியுங்கள் ❤️
#2025உயர்தரபரீட்சை #மாணவர்களுக்குமுக்கியம் #கைபேசிதடை #பெற்றோர்அறிவு #நல்லஎதிர்காலம்
