விடாமல் பளார் பளார் என அறைந்த கடையின் உரிமையாளர்-நகைகடைக்கு திருட வந்த 20 வயது பெண்
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் ராணியா பகுதியில் செயல்பட்டு வரும் நகை கடைக்கு நேற்று இளம் பெண் ஒருவர் வந்துள்ளார்..
முகத்தை மறைத்தவாறு நகை கடைக்கு வந்த அந்தப் பெண் கடை உரிமையாளரிடம் நகை வாங்குவது தொடர்பாக பேசிக் கொண்டிருந்தார். அப்போது தான் மறைத்து வைத்திருந்த மிளகாய் பொடியை நகைக்கடை உரிமையாளரின் முகத்தில் வீசிவிட்டு அந்தப் பெண் நகைகளை திருட முயற்சித்தார்.
உடனே சுதாகரித்துக் கொண்ட நகைக்கடை உரிமையாளர் அந்த பெண்ணை பிடித்து அவருடைய கண்ணத்தில் 17 முறை பளார் பளார் என அறைந்து விட்டார். பிறகு அந்த பெண்ணை பிடித்து நகைக்கடைக்கு வெளியே அழைத்துச் சென்றார். அப்போது சுதாகரித்துக் கொண்ட அந்த பெண் நகை கடைக்காரரின் பிடியிலிருந்து தப்பி சென்றார்.
இந்த சம்பவம் தொடர்பாக நகைக்கடைக்காரர் புகார் அளித்ததை தொடர்ந்து தப்பி ஓடிய பெண்ணை போலீசார் தேடி வருகிறார்கள். மேலும் இந்த சம்பவம் குறித்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..
