சலனம் தீர்க்கும் சனி-இன்றைய ராசி பலன்{15-11-2025}

 

சனிக்கிழமை, 15 நவம்பர் 2025
மேஷம்
aries-mesham
நல் ஆரோக்கியம், நண்பர்கள் சந்திப்பு, திருமணம் மற்றும் நல்முன்னேற்றம் ஆகியவை ஏற்படும். பல வழிகளிலும் பணவரவு ஏற்படும். எல்லா வகையிலும் ஏற்றந்தரும் நாள்.
ரிஷபம்
taurus-rishibum
மனைவி, மக்களின் உடல் நிலையைப் பொருத்தவரை அக்கறை பட வேண்டிய நாள். மேலதிகாரிகள் மற்றும் பெரியவர்களிடம் வாக்குவாதம் செய்யாமல் பணிந்து போவது நல்லது
மிதுனம்
gemini-mithunum
சுமாரான நாள். இன்றைய நாள் கழிவது யுகங்கழிவது போன்றிருக்கும். தாயின் உடல் நிலையில் அதிக அக்கறை கொள்ளுங்கள். நிம்மதியான தூக்கம் வராது.
கன்னி
virgo-kanni
நல் ஆரோக்கியம், சந்ததி விருத்தி, மந்திர சித்தி, பதவி உயர்வு என இராஜயோகம் தரும் நாள். வாக்கு வன்மையால் வருமானம் பெருகும். பயணங்களால் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
மகரம்
capricorn-magaram
தெய்வ சிந்தனை அதிகரிக்கும் நாள். சிலருக்கு குழந்தைப் பிறப்புக்கான வாய்ப்பு உருவாகும். கோவில், குளம் போன்ற திருப்பணிகளில் ஈடுபடுவதால், புகழ் ஓங்கும்.
கடகம்
cancer-kadagam
புதிய கலைப் பயிற்சிகளிலும், கல்வியில் தேர்ச்சி ஏற்படும். சாதுர்யமான வாக்கு வன்மையால் சம்பாத்தியம் உயரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் திருப்திகரமான பண வரவால் சந்தோஷம் நிலவும்.
சிம்மம்
leo-simmam
சிலருக்கு தேவையற்ற விவகாரங்களால் மன நிம்மதி குறையும். எடுத்த காரியங்கள் ஏற்றம் தராது என்பதால், ஒத்திப் போடுவது நல்லது. கடின உழைப்பே கல்வியில் தேர்ச்சி அளிக்கும்.
துலாம்
libra-thulam
குடும்பத்தினருடன் அனுசரித்துச் செல்வது குழப்பங்களைத் தீர்க்கும். சோகமான நாளாக இல்லையெனினும், சுகமான நாளாக இருக்காது. பெண்களின் பிடிவாதத்தால் வீண் விரயங்கள் ஏற்படும்.
மீனம்
pisces-meenam
தொட்டதெல்லாம் துலங்கி பல வழிகளிலும் பணம் வரும். பெண் சுகம் கூடும். மாணவர்களுக்கு கல்வியில் தேர்ச்சி ஏற்படும்.வியாபாரத்தில் திருப்திகரமான பண வரவால் சந்தோஷம் நிலவும்.
தனுசு
sagittarius-thanusu
காரியங்கள் அனைத்திலும் எளிதில் வெற்றி கிட்டும். அரசு ஆதரவால் அதிகாரம் மிக்க பதவி உயர்வு கிடைக்கும். கல்வியில் தேர்ச்சி உண்டு. தன்னம்பிக்கை, தைரியம் அதிகரிக்கும்.
விருச்சிகம்
scorpio-viruchagam
பிறருக்கு உதவி செய்யும் எண்ணம் மேலோங்கும். காரிய வெற்றி களிப்பு உண்டாகும். அரசு ஆதரவும், கல்வியில் தேர்ச்சியும் ஏற்படும். தன்னம்பிக்கை, மற்றும் தைரியம் அதிகரிக்கும்.
கும்பம்
aquarius-kumbam
கோபத்தைக் குறைத்தால் நன்மை ஏற்படும். பணியிட மாற்றங்கள் எதிர்பார்க்கலாம். முறையற்ற வழிகளில் பணம் வரலாம். உறவுகளிடையே மனக்கசப்பு உருவாகும்.

கருத்துரையிடுக

Related Post
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
Site is Blocked
Sorry! This site is not available in your country.