இலங்கை பரீட்சைத் திணைக்களம் க.பொ.த. (சா.தர)ப் பரீட்சை - 2024(2025) மீளாய்வுப் பெறுபேறுகளை வெளியிடல்
2024 ஆம் ஆண்டுக்குரிய க.பொ.த. (சா.தர)ப் பரீட்சைக்குரிய மீளாய்வுப் பெறுபேறுகள் 2025 ஒக்டோபர் மாதம் 09 ஆம் திகதி வெளியிடப்பட்டுள்ளன என்பதை இத்தால் அறியத்தருகின்றேன்.
02. இப் பெறுபேறுகளை இலங்கை பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தளமான www.doenets.lk அல்லது www.results.exams.gov.lk இற்குள் பிரவேசித்து சுட்டெண்ணை அல்லது தேசிய அடையாள அட்டை இலக்கத்தை உள்ளீடு செய்வதன் மூலம் பெற்றுக்கொள்ள முடியும்.
03. இந்த மீளாய்வுப் பெறுபேற்றினடிப்படையில் 2025 ஆம் ஆண்டின் க. பொ. த. (சா.தர)ப் பரீட்சைக்காக விண்ணப்பிப்பதற்கு எதிர்பார்த்துள்ள விண்ணப்பதாரிகள் 2025.10.09 திகதி நள்ளிரவு 12.00 மணிவரை நிகழ்நிலை முறையில் விண்ணப்பிக்க முடியும்.
எக்காரணத்திற்காகவும் விண்ணப்ப இறுதி திகதியானது மேலும் நீடிக்கபடாது என்பதை கவனத்தில் கொள்க
04. இப் பரீட்சையின் பெறுபேறுகள் தொடர்பான விசாரணைகளுக்காக இலங்கை பரீட்சைத் திணைக்களத்தின் பின்வரும் தொலைபேசி இலக்கங்களுடாக பாடசாலைப் பரீட்சைகள் ஒழுங்கமைப்பு, பெறுபேற்றுக் கிளைக்கு தொடர்பு கொள்ளவும்.
நேரடி அழைப்பு இலக்கம்
1911
பாடசாலைப் பரீட்சைகள் ஒழுங்கமைப்பு, பெறுபேற்றுக் கிளை
0112784208, 0112784537, 0112785922
தொலைநகல் இலக்கம்
0112784422
ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே
பரீட்சை ஆணையாளர் நாயகம்
