காலி படபொல கஹட்டப்பிட்டிய பகுதியில் தாய் ஒருவர் தமது குழந்தையைக் கொன்று*விட்டு, தாமும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நேற்று பதிவாகியிருந்தது. படபொல பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் பேரில் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில், குறித்த பெண்ணினதும், அவரது குழந்தையினதும் சடலங்கள் அவர்களது வீட்டிலிருந்து மீட்கப்பட்டெடுத்து விசாரணைகளை மேற்க்கொண்டு வருகின்றனர். கொல்லப்பட்ட குழந்தை மூன்றரை வயதுடைய ஆண் குழந்தை எனவும், தற்கொலை செய்துகொண்ட பெண் 24 வயதுடையவராவார்.
