கொடிகாமம் கச்சாய் துறைமுகப் பகுதியில் கடந்தவாரம் இரவு வேளை சட்டவிரோத மணலுடன் பொலிஸாரின் கட்டளையை மீறி பயணித்த உழவு இயந்திரம் மீது பொலிஸர் துப்பாக்கிச் பிரயோகம் மேற்கொண்டிருந்தனர்.
இதில் உழவு இயந்திரத்தின் சாரதியான இளைஞர் ஒருவர் காயமடைந்து சிகிச்சைக்காக வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருக்கும் நிலையில் எதிர்வரும் 7 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கான உழவு இயந்திரம் கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர் சட்டவிரோத மணலுடன் செல்லும் போது பொலிஸார் இடைமறித்த நிலையில் பொலிஸாரின் கட்டளையை மீறி மணலை வீதியில் கொடியவாறு செல்லும் அதிர்ச்சிக் காணொளியை கொடிகாமம் பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.
அத்துடன் குறித்த உழவு இயந்திரத்தின் மீது 2 முறைப்பாடுகளும் 3 முற்குற்றங்களும் இருப்பதாக கொடிகாமம் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
